மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தனது 15வது வயதில், இளைஞர் திமுக கோபாலபுரம் என்று ஆரம்பித்து அண்ணாவையே அதில் வந்து உரையாற்ற வைத்த சாமர்த்தியமும் ஆற்றலும் நமது முதல்வருக்கு உண்டு. கலைஞருக்கு எடுத்துக்காட்டாக அவரது வழியில் இன்று முதல்வராகியுள்ள மு.க.ஸ்டாலினை பற்றி கலைஞர் சொன்னது, உழைப்பு.. உழைப்பு உழைப்பின் மறு பெயர் தான் ஸ்டாலின் என்றார். அதை 100க்கு 100 எல்லோரும் ஆமோதிப்பார்கள். திமுகவை அழிப்போம், ஒழிப்போம், அறிவாலயத்தை தகர்ப்போம் என்று சொல்லுகிற பைத்தியக்காரர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.
பல உயிர்களை கொடுத்து இந்த இயக்கம் காப்பாற்றப்பட்டது. இந்தியை திணிப்போம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு தமிழகத்தை எத்தனையோ நெருக்கடிகள் சூழ்ந்துள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மாட்டோம் என்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் எத்தனையோ பல சாதனை திட்டங்களை செயல்படுத்தியுள்ள முதல்வர் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழகத்தை பல நெருக்கடி சூழ்ந்துள்ள நிலையிலும் பல சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ appeared first on Dinakaran.