
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இரண்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே மார்ச் 19 அன்று அறிவித்திருந்தது. அதில் சென்னை சென்ட்ரல் - போத்தனூர் ரெயில் 30ம் தேதி செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரெயிலின் இயக்கப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மார்ச் 28, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 11.50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9 மணியளவில் போத்தனூர் சென்றடையும்.
போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் (எண்: 06028) சிறப்பு ரெயில் மார்ச் 31, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 23.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்குத் தொடங்கும். இந்த ரெயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.