ரமலான் நோன்பு தொடங்​கியது: மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

11 hours ago 2

சென்னை: ரமலான் நோன்பு நேற்று தொடங்​கியதையொட்டி, மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்​தினர். இஸ்லாமியர்​களின் 5 முக்கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்​கு​வதற்கான பிறை பிப்​.28-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை), சென்னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட​வில்லை.

எனவே, மார்ச்​.2-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) ரமலான் நோன்பு தொடங்​கு​கிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்​தார். இதைத்​தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்​கியது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்​பிட்டு நோன்பை தொடங்​கினர். ரமலான் நோன்பு தொடங்​கியதையடுத்து, நேற்று தமிழகம் முழு​வதும் உள்ள மசூதி​களில் சிறப்பு தொழுகை நடைபெற்​றது.

Read Entire Article