டெய்ர் அல் பலாஹ்: ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. மார்ச் மாத தொடக்கத்தில் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ்சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் துண்டித்தது.
காசா மீதான தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தீவிரப்படுத்தி வந்த நிலையில், காசாவின் தெற்கு நகரமான ரப்பாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. ரப்பா நகரம் முழுவதும் மற்றும் அருகில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த உத்தரவு இருந்தது. பாலஸ்தீனியர்கள் முவாசியில் உள்ள முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். ரமலான் மாத முடிவான ஈத் பண்டிகையின்போது இந்த உத்தரவுகளை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
The post ரப்பா நகரில் இருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவு appeared first on Dinakaran.