சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன் எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அடுத்த சில ஓவர்களில் 100 ரன்னை எடுத்து விடலாம் என்ற ஆசையில் அவர் இருந்தார். அப்போது, சன்ரைசர்ஸ் அணியின் ஜீசன் அன்சாரி வீசிய பந்தை அடித்த ஜோஸ் பட்லர், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிவருமாறு சுப்மன் கில்லை அவசரப்படுத்தினார்.
பட்லர் எதிர் முனைக்கு ஒடிவிட, கில் அடுத்த முனைக்கு சென்றடைந்த சமயத்தில் ஹர்சல் படேல் எடுத்து வீசிய பந்தை மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் பிடித்து ஸ்டம்புகளில் அடித்தார். அதையடுத்து, கில், அவுட் என 3வது அம்பயர் கூற, முனகிக் கொண்டே கோபத்துடன் கில் வெளியேறினார். எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்றிருந்த 3வது அம்பயரை பார்த்ததும் கோபம் கொண்ட கில், அவருடன் கடும் ஆத்திரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
The post ரன் அவுட் தந்ததால் ஆவேசம்: கில் எடுக்க நினைச்சது நூறு நடுவரிடம் சண்டை தாறுமாறு appeared first on Dinakaran.