இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவர்களுடனான போட்டி அல்ல; உயர்ந்த நிலையை அடைவது: பிரதமர் மோடி பேச்சு

14 hours ago 3

டெல்லி: இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவர்களுடனான போட்டி அல்ல. மற்றவர்களை விட உயர்ந்த நிலையை அடைவது பற்றியது என விண்வெளி ஆய்வு தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பேசியதாவது:
விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல, அதுஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு செயல்முறையின் பிரகடனம். இந்தியாவின் விண்வெளி பயணம் இந்த நிமிடம் வரை பிரதிபலிக்கிறது. 1963 இல் ஒரு சிறிய ராக்கெட்டிலிருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. நமது ராக்கெடுகள் அதிக எடையை எடுத்து செல்வதுடன் 1.4 பில்லியன் இந்திய மக்களின் கனவுகளையும் சுமந்து செல்கிறது. இந்தியாவின் சாதனைகள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கல். அதையும் தாண்டி மனிதர்கள் ஈர்ப்பு விசையை வரையறுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செவ்வாய் கிரகத்தை 2014 இல் தனது முதல் முயற்ச்சியிலேயே அடைந்து மூலம் வரலாற்றை உருவாக்கியுள்ளது. சந்திரயான்-1 நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. சந்திரயான்-2 நிலவின் உயர் தெளிவுத்திறன் படத்தை வழங்கியது. சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கிறது. எங்களுக்கு தேவையான கிரையோஜெனிக் எஞ்சினை நாங்களே உருவாக்குனோம். ஒரு ராக்கெட்டில் 100 செயற்க்கைகோளை விண்ணிலில் செலுத்தியுள்ளோம். எங்கள் ராக்கெட்டுகள் மூலம் 34 நாடுகளின் 400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளோம்.

2035-ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைக்க உள்ளது. இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவர்களுடனான போட்டி அல்ல. மற்றவர்களை விட உயர்ந்த நிலையை அடைவது பற்றியது.

The post இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவர்களுடனான போட்டி அல்ல; உயர்ந்த நிலையை அடைவது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article