ரஞ்சி கோப்பை: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி இரட்டை சதம்.. மும்பை 602 ரன்கள் குவிப்பு

2 months ago 10

மும்பை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் நடப்பு சாம்பியன் மும்பை- ஒடிசா (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 123.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அதிராடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 233 ரன்களும், சித்தேஷ் லாத் 169 ரன்களும் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி 2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. சந்தீப் பட்நாயக் 73 ரன்களுடனும், தேபரதா பிரதான் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Read Entire Article