ரஞ்சி கோப்பை: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சு.. ஒடிசாவை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி

6 months ago 19

மும்பை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் நடப்பு சாம்பியன் மும்பை-ஒடிசா (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஒடிசா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 233 ரன்கள் குவித்தார். இதனையடுத்து ஆடிய ஒடிசா அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 317 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஒடிசா 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஒடிசா 72.5 ஓவர்களில் 214 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளும், ஹிமான்ஷூ சிங் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகள் அள்ளிய ஷம்ஸ் முலானி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Read Entire Article