
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எல் 2 எம்புரான் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வெற்றிபெற்றநிலையில், தற்போது வெளியாகி இருக்கும் 'தொடரும்' படமும் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படம் கேரளாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும், ரூ. 200 கோடி உலகளாவிய வசூலுடன், மூன்றாவது அதிக வசூல் செய்த மலையாள படமாகவும் இது மாறியுள்ளது. இப்படத்தில் மோகன்லாலுடன், ஷோபனா, பிரகாஷ் வர்மா, பினு பப்பு, தாமஸ் மேத்யூ ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.