ரஞ்சி கோப்பை: ரகானே தலைமையில் களமிறங்கும் ரோகித் சர்மா

3 hours ago 1

மும்பை,

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. தோல்வி எதிரொலியாக ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது.

இந்நிலையில் நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த கட்ட லீக் சுற்றுகள் 23-ம் தேதி தொடங்குகின்றன. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரகானே தலைமையிலான அந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

மும்பை அணி விவரம்:- ரகானே (கேப்டன்), ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், அயூஷ் மாத்ரே, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாடு, ஷிவம் துபே, ஹர்திக் தாமோர், ஆகாஷ் ஆனந்த், தனுஷ் கோட்டியான், ஹிமான்சு சின்ஹ், ஷர்துல் தாகூர், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், கர்ஷ் கோத்தாரி.

Read Entire Article