ரஞ்சி கோப்பை :மும்பை - அரியானா ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றம்

3 hours ago 1

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அதன்படி சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதி சுற்று ஆட்டங்கள் வருகிற 8-ம் தேதி தொடங்குகின்றன.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- அரியானா இடையிலான காலிறுதி ஆட்டம் வருகிற 8-ந்தேதி அரியானா மாநிலம் ரோடாக் மாவட்டத்தில் உள்ள லாலியில் தொடங்க இருந்தது.

குளிர்காலம் என்பதால் அங்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் காலையில் போட்டியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்குவது சிக்கல் தான். இதை கருத்தில் கொண்டு இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

Read Entire Article