ரஞ்சி கோப்பை தொடரில் களம் இறங்கும் ரவீந்திர ஜடேஜா

2 hours ago 2

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது மூத்த வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார். ரஞ்சி கோப்பையில் வரும் 23-ம் தேதி சவுராஷ்டிரா - டெல்லி அணிகள் மோதன் உள்ளன. இந்த ஆட்டத்தில் சவுராஷ்டிரா தரப்பில் ஜடேஜா களம் இறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article