ரஞ்சி கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இன்று மோதல்

3 months ago 11

கொல்கத்தா,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த ஜம்மு காஷ்மீர், மும்பை (ஏ), விதர்பா, குஜராத் (பி), அரியானா, கேரளா (சி), சவுராஷ்ரா, தமிழ்நாடு (டி) ஆகிய அணிகள் காலிறுதி தகுதி பெற்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொள்கிறது.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றொரு காலிறுதியில் விதர்பா - தமிழ்நாடு அணிகள் சந்திக்கின்றன. புனேயில் நடைபெறும் இன்னொரு காலிறுதியில் ஜம்மு காஷ்மீர்-கேரளா அணியும், ராஜ்கோட்டில் நடக்கும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா - குஜராத் அணியும் களம் காணுகின்றன. அரியானா- மும்பை ஆட்டம் காலை 9 மணிக்கும், மற்ற ஆட்டங்கள் காலை 9.30 மணிக்கும் தொடங்கி நடைபெறுகிறது.

Read Entire Article