ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்! ... வைரலாகும் புகைப்படம்

1 month ago 6

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்தது.

'கூலி' படத்திற்குப் பின் ரஜினி இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் இருக்கும் புகைப்படத்தை 'பேட்ட, கூலி, ஜெயிலர்' என பதிவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த 3 படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

'கூலி' படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

Read Entire Article