
சென்னை,
நடிகை சாய் பல்லவியும் நடிகர் விஜய்யும் எப்போது திரையில் ஒன்றாக தோன்றுவார்கள் என்பது அனைவரது எதிர்பார்ப்புமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு விஜய்யின் 'லியோ' படத்தில் கிட்டத்தட்ட நடக்க இருந்தது. ஆனால், அப்படத்தில் சாய்பல்லவி நடிக்க மறுத்ததாக தெரிகிறது.
'லியோ' படத்தின் நடிகர்கள் தேர்வின்போது, விஜய்யின் மனைவியாக நடிக்க தயாரிப்பாளர்கள் நடிகை சாய்பல்லவியிடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் சாய்பல்லவி அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து சாய் பல்லவி திருப்தி அடையாததால், படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் திரிஷா நடித்திருக்கிறார். 'லியோ' உலகளவில் கிட்டத்தட்ட ரூ.623 கோடி வசூலித்தது
தற்போது விஜய் தனது கடைசி படமான ஜன நாயகனில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
மறுபுறம், சாய் பல்லவி கடைசியாக தண்டேலில் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற்றது. அடுத்து அவர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.