
சென்னை,
நடிகர் ஜீவா தற்போது பா.விஜய் இயக்கி உள்ள 'அகத்தியா' பேய் படத்தில் நடித்து இருக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பட நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது, ''எனது தந்தை தயாரிக்கும் 99-வது படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அது பெரிய பட்ஜெட் படமாக தயாராக உள்ளது. நான் நடித்த ஈ படமும் பெரிய பட்ஜெட் படம்தான். இன்றைய காலத்தில் ஓ.டி.டி. என்றெல்லாம் வியாபார ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்து இருப்பதால் கவனமாக படங்களை தயாரிக்க வேண்டி உள்ளது. நிறைய புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்த பெருமை எனக்கு இருக்கிறது.
தற்போது ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. ஒரே படத்தில் ஐந்து ஜானரை கலவையாக பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் ஹாரர், திரில்லர், காமெடி, ஆக்ஷன், அனிமேஷன், பேண்டசி ஆகியவற்றின் கலவையாக அகத்தியா படம் உருவாகி உள்ளது. இதில் சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளை குழந்தைகள் பார்த்து ரசிப்பார்கள். இந்த படத்தில் நாயகியாக வரும் ராஷி கன்னா எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்' என்றார்.