ரங்கஸ்தலத்தை விட... - ''பெத்தி' குறித்து ராம் சரண் நம்பிக்கை

4 hours ago 4

லண்டன்,

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பவர் ராம் சரண். இவர் தற்போது 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'பெத்தி' படத்தில் ரங்கஸ்தலத்தை விட அதிக எமோஷன் இருப்பதாக ராம் சரண் கூறியுள்ளார். லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் ராம் சரணின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தனது குடும்பத்தினருடன் ராம் சரண் கலந்துகொண்டார்.

அவ்விழாவில் பேசிய அவர், தனது அடுத்த படமான 'பெத்தி' பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

"கிட்டத்தட்ட 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரங்கஸ்தலத்தை விட பெத்தியில் அதிக எமோஷன் இருக்கும். அதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இம்மாத நடுப்பகுதியில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவேன்" என்றார்.

Read Entire Article