வீட்டிற்கு நடந்து சென்ற பெண் ஐ.டி. ஊழியருக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

2 hours ago 2

சென்னை,

சென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வாயை பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து வாலிபரிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

சம்பவம் நடந்த இடத்தில் மக்கள் யாரும் இல்லாததால் இளம்பெண் வாலிபரின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலயத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பெருங்குடியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருவதாகவும், மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்நிலைய கழிவறையில் கைதான யோகேஸ்வரன் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article