யோகி பாபுவை பாராட்டிய பவன் கல்யாண்

3 months ago 27

சென்னை,

2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. இவர் தற்போது, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கும் இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் யோகி பாபு, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 'வானவன், ஜோரா கைய தட்டுங்க' போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்தநிலையில், நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ளார். அதில் நடிகர் யோகி பாபுவின் நடிப்பு தனது மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்த பதிவை யோகி பாபு தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Thank you so much deputy chief minister of Andra pradesh @PawanKalyan sir for your prestiges words and encouraging me #PawannKalyan #yogibabu #pawankalyanyogibabu pic.twitter.com/cHSjPI2K96

— Yogi Babu (@iYogiBabu) October 2, 2024
Read Entire Article