யோகா பயிற்சியில் மாணவர்கள் உலக சாதனை

4 months ago 12

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தியது. இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். இந்தநிகழ்வின் போது, யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், ஒரே நேரத்தில் 105 மாணவர்கள் தொடர்ந்து 10 நிமிடங்கள் அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.

இவர்களது சாதனை வேல்ட்வயட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கும், பயிற்சி மையத்திற்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயங்கள் வழங்கப்பட்டன. அவற்றை, சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிந்துஜா வினித் வழங்கினார். நிகழ்வில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாணவர்களை உற்சாகம் செய்தனர்.

The post யோகா பயிற்சியில் மாணவர்கள் உலக சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article