மதுரை, ஜூன் 6: மதுரை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால், அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உர விற்பனையானளர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 200 தனியார் உரக்கடைகள் உள்ளன. அதேபோல் 176 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உர விற்பனை செய்வோர் உள்ளனர். உரம் விற்பனை நிலையங்களை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு உரங்களை ஆதார் கார்டு மூலம் பிஓஎஸ் இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்களில் மட்டுமே உரங்களை வாங்க ேவண்டும். விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யும் கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும். போலி உரங்கள் விற்பனை செய்வோர் குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
The post யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் உடனடி ரத்து: வேளாண் அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.