யுகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

2 days ago 4

சென்னை: இந்தியாவில், வெவ்வேறு மொழிகள், கலாச்சாரத்தின் அடிப்படையில் பல பண்டிகைகள் கொண்டாப்பட்டு வருகிறது. யுகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில்தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.

* பிரதமர் மோடி: யுகாதி திருநாளை முன்னிட்டு இதுதொடர்பாக இது நம்பிக்கை மற்றும் துடிப்புடன் தொடர்புடைய ஒரு சிறப்புப் பண்டிகை என தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்றும், அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும் என கூறியுள்ளார். மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வு தொடர்ந்து வளர்ந்து செழிக்கட்டும் எனறும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

* எடப்பாடி பழனிசாமி : “யுகாதி என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

* எல். முருகன்: இன்று, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடுகிற சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ‘யுகாதி’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், மக்கள் அனைவரது புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், மகிழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளளார் .

* விஜய்: தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

* அண்ணாமலை: “பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழியுடனும், தமிழ் மக்களுடனும் இரண்டறக் கலந்து, நம் மண்ணுக்கும், கலாச்சாரத்துக்கும் பெருமை சேர்த்து, சகோதரத்துவம் பேணும் நம் தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு, பாஜக சார்பாக இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாகவும், அன்பும், அமைதியும் நிலவுவதாகவும், வசந்த காலத்தின் தொடக்க நாளான இந்த உகாதி நன்னாள் அமையட்டும்” இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவ்வாறு யுகாதி திருநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post யுகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article