
இந்தியாவில் யு.பி.ஐ. என்னும் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகள் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ஆன்லைன் முதலீடுகள் வரை யு.பி.ஐ. மூலமாக நிதி பரிவர்த்தனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அரசு தபால் நிலையங்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது இல்லாமல் இருந்தது.
சிலமாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தபோதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் தொழில்நுட்ப சிக்கல்கள் அனைத்தையும் இந்திய தபால்துறை சீரமைத்துள்ளது. இதனால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தபால் நிலையங்களில் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து யு.பி.ஐ. மூலமாக கட்டணங்கள் செலுத்துவது அமல்படுத்தப்பட உள்ளது.