யு.ஜி.சி. நெட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

2 hours ago 1

சென்னை,

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும், பி.எச்.டி, படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் 'யு.ஜி.சி. நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2024 டிசம்பர் மாதத்திற்கான யு.ஜி.சி. நெட் தேர்வு கடந்த மாதம் 9 நாட்கள் நடைபெற்றது.

இந்தநிலையில், யு.ஜி.சி.நெட் தேர்வு விடைக்குறிப்புகளை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் விடைக்குறிப்பை அறிந்துக் கொள்ளலாம். தேர்வர்கள், விடைக்குறிப்புகள் மீது நாளை மாலை 6 மணிக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறியுள்ளது.

Read Entire Article