
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான "எக்ஸ் ரே கண்கள்" பூஜையுடன் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார்.

எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.