யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை - ஹர்திக் பாண்ட்யா

11 hours ago 3

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், "ரோகித் மற்றும் ரிக்கல்டன் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் 15 ரன்கள் அடித்திருக்கலாம். சூர்யாவும் நானும் இங்கே ஷாட்டுகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று பேசினோம். ரோகித், ரியான் ஆகியோரும் அதே வழியில் பேட்டிங் செய்தனர். இவை அனைத்தும் வீரர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்கு பற்றி கிடையாது. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் விளையாடுவதைப் பற்றியதாகும்.

ஒரு அணியாக நாங்கள் சிறந்த வழியில் பேட்டிங் செய்தோம். எங்களது பவுலர்களில் யாரை பாராட்டுவது என்பது எனக்கு தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் எளிமையான கிரிக்கெட்டை விளையாடுவதற்கு ஆதரவளித்து அதற்காக வேலை செய்கிறோம். நாங்கள் பணிவாகவும், மிகவும் ஒழுக்கமாகவும், தொடர்ந்து கவனம் செலுத்தி விளையாட விரும்புகிறோம்" என்று கூறினார்.

Read Entire Article