![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39209190-aparatham.webp)
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு ஒருவர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ஒற்றை யானை சுற்றிதிரிவதை பார்த்து அதனுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார் .
இது குறித்த வீடியோவை அவர் தனகு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது வைரலான நிலையில் அது வனத்துறையினரிடம் சிக்கியது. இதனையடுத்து யானையை சீண்டியதாகக் கூறி வனத்துறையினர் அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த சுற்றுலா பயணியிடம் மன்னிப்புக் கடிதமுல் எழுதிவாங்கியுள்ளனர்.