யானை தாக்கி விவசாயி பலி அடக்க நிகழ்வில் மனைவி மரணம்

1 month ago 5

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அணைக்கரை பைரமரத் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாறன் (55). இவர் மக்காச்சோளம் பயிரை விலங்குகளிடம் இருந்து காப்பதற்காக தினமும் இரவில் காவலுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு மாறன் பயிருக்கு காவல் இருந்தபோது காட்டு யானை தாக்கி பலியானார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று மாலை சொந்த ஊரான பைரமரத் தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றபோது அவரது மனைவி சன்மாதி (50) அழுதபடியே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலும் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.

The post யானை தாக்கி விவசாயி பலி அடக்க நிகழ்வில் மனைவி மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article