
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் கானோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்து கானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 23 பேர் பயணித்தனர்.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். சாலை விதிகளை மீறி பஸ் டிரைவர் செயல்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.