மோடியின் பையை தேர்தல் ஆணையம் சோதிக்குமா? உத்தவ் தாக்கரே விமர்சனம்

6 months ago 16

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களுக்காக கறுப்பு பணம் நிறைந்த சூட்கேஸ்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் யவத்மால் மாவட்டம் வானியில் தனது கட்சி வேட்பாளர் சஞ்சய் டெர்கருக்காக தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றபோது, உத்தவ் தாக்கரே கொண்டு சென்ற பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘எனது ஹெலிகாப்டர் வானியை அடைந்த பிறகு, எனது பைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக நான் வருத்தப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் ஆளும்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் இதேபோன்று ஆய்வு செய்யுமா? என்று தான் கேட்கிறேன்’ என்றார்.

The post மோடியின் பையை தேர்தல் ஆணையம் சோதிக்குமா? உத்தவ் தாக்கரே விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article