மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வரும் நேரத்தில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது தமிழ்நாடு: செல்வப்பெருந்தகை அறிக்கை

1 week ago 5

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
உலக வறுமைக் குறியீட்டின்படி மொத்தமுள்ள 127 நாடுகளில் 105வது இடத்தில் இருக்கிற பரிதாப நிலையை பார்த்தால் இந்தியாவில் பசி, பட்டினியால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

ஆனால், ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கையும் மீறி தமிழ்நாடு அரசு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அயராத உழைப்பினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவிகித வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிற நேரத்தில் தமிழகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. எனவே மோடியினுடைய பிரசார உத்திகளுக்கு தமிழக மக்கள் என்றைக்கும் இரையாக மாட்டார்கள்.

The post மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வரும் நேரத்தில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது தமிழ்நாடு: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article