விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைப் பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடி பேசியது: ''புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து இருப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள் எங்கள் பக்கம் என்று கூறிவருகிறார்கள். அவர்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை கூர்தீட்டி 2026 தேர்தல் களத்திற்கு தயாராக்கி கொண்டுள்ளார்.