சென்னை: 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரித்தது.
சோதனையில், 14.5.2001 முதல் 31.3.2006 வரை கணக்கில் வராத ரூ.2.07 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 2022 பிப்ரவரியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் உள்பட ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் பணம் மோசடி தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பு தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கி உள்ளது.
The post தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம் appeared first on Dinakaran.