மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மொரிஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட்லூயிசுக்கு ஏர்மொரிஷியஸ் விமானத்தில் 217 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 227 பேர் புறப்பட தயாராக இருந்தனர். பின்னர் அந்த விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன், அதன் இயந்திர செயல்பாடுகளை விமானி சரிபார்த்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
இதையடுத்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதன்பின்னர் விமான பொறியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு 2 மணி நேரத்தில் சரிசெய்தனர். இதைத் தொடர்ந்து, மொரிஷியஸ் செல்லும் விமானம் 227 பேருடன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் போர்ட்லூயிஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டறிந்து துரித நடவடிக்கை எடுத்ததால், விமானத்தில் இருந்த 227 பேரும் தப்பினர்.
The post மொரிஷியஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 227 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.