மையோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை : தெலங்கானாஅரசு அதிரடி தடை

3 months ago 13

mayonnaiseஹைதராபாத் : மையோனைஸ்சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தெலங்கானாவில் மையோனைஸ்பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மையோனைஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே, ஐதராபாத்தில் மையோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் பலியான நிலையில், 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயோனைஸால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் சில நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கு பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து புகார்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக தற்போது மையோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) பரிந்துரையின் அடிப்படையில் தெலங்கானா மாநிலம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும் மமையோனைஸின் தரம் குறித்து நகராட்சி அமைப்புக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மையோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை : தெலங்கானாஅரசு அதிரடி தடை appeared first on Dinakaran.

Read Entire Article