சென்னை: மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் 6 மாத காலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.