மைசூரு சோப்பு விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்

4 hours ago 3

பெங்களூரு,

கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூரு சாண்டல் என்ற பெயரில் பல்வேறு வகையான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மைசூரு சாண்டல் சோப்பு வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம், பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணிக்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் கன்னடர்கள் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுபற்றி கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். நடிகை தமன்னாவை நியமிப்பதற்கு முன்பு நாங்கள் கன்னடரான நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை சந்தித்து இதுபற்றி பேசினோம். அவர்களுடன் நடிகைகள் ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடமும் பேசினோம். தீபிகா படுகோனே வேறு பிரசார நிகழ்வுகளில் தீவிரமாக உள்ளார். மற்ற நடிகைகள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளில் விளம்பர தூதர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளோம்"' என்றார்.

Read Entire Article