துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

4 hours ago 1

அங்காரா,

துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது அதிபர் மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம் போன்றவை சூறையாடப்பட்டன.

இந்த வன்முறையில் சுமார் 290 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் ராணுவ வீரர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய 63 ராணுவ வீரர்களை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து இஸ்தான்புல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Read Entire Article