சென்னை: நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
தேர்தல் பொதுக் கூட்டங்களில் கடுமையான, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்ச்சிபது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகாரில் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி; தந்தை பெரியார்தான் திராவிட இயக்கங்களின் தலை காவேரி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை எங்கும் நடைபெறாத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னிடம் வெடிகுண்டு உள்ளது. வெடிகுண்டு எறிந்தால் அந்த இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது. கொலைவெறியில் உள்ளேன் எனக் கூறுகிறார். தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்து காட்டி ஈரோடு மக்களை அவமதிக்கிறார்.
மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார். தந்தை பெரியாரை சீமானை விட புகழ்ந்தவர் யாருமில்லை. சீமான் குழம்பி போய் உள்ளார். பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்ததாக கூறுகின்றனர். பிரபாகரனுக்கு வேறு வேலை இல்லையா? இப்படிப்பட்ட ஆட்களை வளர விட்டால் தமிழ்நாட்டிற்கு தீமைதான். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
The post மைக்கை நீட்டினால் குரங்கு டேன்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார் சீமான்: புகழேந்தி காட்டம் appeared first on Dinakaran.