தர்மபுரி, டிச.20: தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை சின்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி(40). கட்டிட மேஸ்திரியான இவர், நேற்று முன்தினம் மாலை வத்தல்மலையில் இருந்து, தர்மபுரிக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது, அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ₹6 ஆயிரத்தை, வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சின்னசாமி, திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த வாலிபர்கள், பணத்துடன் ஓடிய வாலிபரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரித்ததில் ஓசூர் பாரதியார் நகரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சந்திரகுமார்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
The post மேஸ்திரியிடம் பணம் பறித்த ஓசூர் வாலிபர் கைது appeared first on Dinakaran.