சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரவுபதி அம்மன் கோயிலில், கோர்ட் அனுமதித்ததை தொடர்ந்து, ஏராளமான பட்டி யல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்தனர். இதனா ல் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர் கோயில் வழிபாட்டை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
சாதி ஆதிக்க எண்ணத்துடன், கோயிலை புறக்கணிக்க தூண்டும் சக்திகளை மக்கள் ஒன்றுபட்டு நின்று ஒதுக்கித்தள்ள வேண்டுமென சி.பி.எம் மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. சாமி வழிபாட்டில் அனைத்து மக்களும் சமமே என்பதை ஏற்க மறுத்து, சாதி ஆதிக்க எண்ணத்தை கொம்பு சீவி விடும் சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று சி.பி.ஐ(எம்) வேண்டி கேட்டுக் கொள்கிறது.
The post மேல்பாதி கோயில் விவகாரம் அரசியலமைப்புக்கு எதிரான ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.