மேலூர், அக். 21: மேலூர் அருகே உள்ள 11 ஊரணிகளில் தமிழக மீன்வளத்துறை சார்பில், 34 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின் அடிப்படையில், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகாமை சார்பில், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்து குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11 ஊரணிகளில் மொத்தம் 34000 ரோகு இன மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல மீன் வளத்துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குநர் சிவராமச்சந்திரன், ஆய்வாளர்கள் முருகேசன், சோபியா மற்றும் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரசாமி, ரத்தின கலாவதி, கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உஷா இளையராஜா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சங்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post மேலூர் அருகே ஊரணிகளில் மீன் குஞ்சுகள்: மீன்வளத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.