மேலூரில் இருந்து பெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரண பொருட்கள்

1 month ago 7

மேலூர், டிச. 6: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு மேலூரில் இருந்து நிவாரணப் பொருட்கள் இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில், விழுப்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாய், போர்வை, தண்ணீர் பாட்டில், அரிசி, பலசரக்கு பொருட்கள், பன், பிரட் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டது.

மேலூர் போலீசார், வணிகர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உட்பட பலர் இணைந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இரண்டு வேன்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.ஐ ஆனந்த ஜோதி, சிறப்பு எஸ்.ஐ முருகேசன், போக்குவரத்து காவலர்கள் தெய்வம், கார்த்திக், சுரேஷ் மற்றும் வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

The post மேலூரில் இருந்து பெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Read Entire Article