மேலும் 3 காவல் நிலையங்களில் இயக்குனர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி மீது புகார் கொடுத்தனர்

16 hours ago 2

பெரம்பூர்: நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி கலந்துகொண்டு ஐயப்பனை பற்றி பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடலில் வரும் சில வரிகள் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மதக்கலவரத்தை பயங்கரவாதத்தையும் தூண்டும்விதமாக இருப்பதாகவும் இயக்குனர் ரஞ்சித், பாடகி இசைவாணி மீது இந்து அமைப்பினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

செம்பியம், திருவிக.நகர் காவல் நிலையங்களில் ஏற்கனவே இந்து அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். நேற்று அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளையின் மாநில மகளிரணி தலைவர் வளர்மதி, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுபோல் அனைத்து இந்து திருக்கோயில் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் சுபாஷ், எம்கேபி. நகர் காவல் நிலையத்திலும் அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் முனிவேல் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுக்களில், ‘’மதக் கலவரத்தையும் இந்து ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்ற வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித், கானா பாடகி இசைவாணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

The post மேலும் 3 காவல் நிலையங்களில் இயக்குனர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி மீது புகார் கொடுத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article