மேலும் 2 ஆண்டுகளுக்கு பாக். ராணுவ தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

2 months ago 13

லாகூர்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து நாடாளுமன்றம் மசோதா நிறைவேற்றி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இருந்தாலும், ராணுவ தளபதி அசிம் முனீர் கட்டுப்பாட்டில் தான் அந்த நாட்டு ஆட்சி நடந்து வருகிறது. இம்ரான்கான் ஆட்சியை அகற்றியது முதல் அவர் மீதான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது, வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைத்துள்ளது வரை ராணுவத்தின் பங்கு இருப்பதாக இம்ரான்கான் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதற்கும் ராணுவம் தான் காரணம் என்ற புகாரும் உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள மூன்று ஆயுதப் படைத் தலைவர்களின் பதவிக் காலத்தை மூன்றிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் சட்டத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 17ல் இருந்து 34 ஆக உயர்த்தும் சட்டத்தையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

 

The post மேலும் 2 ஆண்டுகளுக்கு பாக். ராணுவ தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article