மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: 10ம் நாளாக குளிக்க தடை

5 hours ago 2


அம்பை: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 9வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழைத் தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 14ம்தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து இன்றுடன் 10வது நாளாக மழை பெய்து அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

The post மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: 10ம் நாளாக குளிக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article