மேற்கு வங்காளம்; வக்பு சட்டம் தொடர்பான வன்முறைக்கு தந்தை-மகன் பலி

6 days ago 5

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது. பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியது. வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர் என இன்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஐ.பி.எஸ். அதிகாரி கூறும்போது, வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மகன் மற்றும் 2 பேர் கத்தித்குத்து காயங்களுடன் கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டது என்றார். அவர்களுடைய வீட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்ததுடன், 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர் என அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதேபோன்று, சாம்சர்கஞ்ச் பகுதியில் துலியான் என்ற இடத்தில் மற்றொரு நபர், துப்பாக்கி குண்டு காயத்துடன் கிடந்துள்ளார். அவரை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

Read Entire Article