கொல்கத்தா: ஜிபிஎஸ் என்ற அரிய வகை நோய்க்கு மேற்கு வங்கத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிபிஎஸ் (கிலான் பர்ரே சிண்ட்ரோம்) என்ற நரம்பியல் நோய் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் ஒருவர் பலியானார். மேலும் 100க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய் பரவி வருகிறது. ஜிபிஎஸ் நோய்க்கு கடந்த 4 நாட்களில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த தேப்குமார் சாகு(10), அரித்ரா மணால்(17) ஆகியோர் உயிரிழந்தனர். அதே போல் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 48 வயது நபரும் இறந்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ 3 பேரும் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர். தேப்குமார், அரித்ரா மணால் ஆகியோர் கொல்கத்தா பி.சி.ராய் மருத்துவமனையில் இறந்தனர். 48 வயதான நபர் ஹூக்ளியில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் இறந்தார். மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்றனர். இதற்கிடையே, கொல்கத்தாவில் ஜிபிஎஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் பி.சி.ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
The post மேற்கு வங்கத்தில் ஜிபிஎஸ் நோய் பரவுகிறது சிறுவன் உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.