மேற்கு வங்கத்தில் 300 ஆண்டு சாதி பாகுபாட்டுக்கு தீர்வு: முதல் முறையாக கோயிலில் சாமி கும்பிட்ட தலித்துகள்

5 hours ago 4

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம்,கிழக்கு பர்த்தமான் மாவட்டம், கிட்கிராம் என்ற இடத்தில் கிட்டேஸ்வர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் 300 ஆண்டு பழமையானது. கிராமத்தில் 130 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் தலித் மக்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கோயிலுக்கு சென்று வழிபடுவதற்கான உரிமை கேட்டு தலித் மக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உயர் அதிகாரிகள் இந்த விஷயம் தொடர்பாக கிராம மக்களை சந்தித்து பேசினர்.

அதில் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது. இந்நிலையில் சப் கலெக்டர் அஹிம்சா ஜெயின் தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் ரபீந்தரநாத் சட்டர்ஜி,அபூர்பா சவுத்ரி, போலீஸ் அதிகாரிகள், கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராமத்தில் நிலவி வந்த 300 சாதி பாகுபாடு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. அதன் படி தலித் குடும்பங்களின் பிரதிநிதிகளாக 5 பேர் கிட்டேஸ்வர் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

The post மேற்கு வங்கத்தில் 300 ஆண்டு சாதி பாகுபாட்டுக்கு தீர்வு: முதல் முறையாக கோயிலில் சாமி கும்பிட்ட தலித்துகள் appeared first on Dinakaran.

Read Entire Article