
சென்னை,
'சூப்பர் ஸ்டார்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்திலும் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவர் கூறுகையில்,
'செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரம், பெருமைகள் பற்றி தெரியாமல் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் நமது கலாசார பெருமையை பற்றி அறியாமல் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாசாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என்று இந்தியா வருகிறார்கள். நாட்டின் உன்னதமான கலாசாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்' என்றார்.